2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

வர்த்தக நிலையத்துக்கு தீ வைப்பு

Princiya Dixci   / 2017 மே 21 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்டத்தின் பெந்தோட்டை, எல்பிட்டியப் பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையத்துக்கு, இனந்தெரியாதவர்கள் தீ வைத்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் பேருவாளைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இந்தச் சம்பவம் தொடர்பில் அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

PVC குழாய் ஒன்றை முன் கதவால் உள்ளே அனுப்பி அதன் ஊடக, வர்த்தக நிலையத்துக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .