2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கதிர்காமம் புனித பூமியில் சலவைக் கற்கள் பதிப்பு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.மன்சூர்)

கதிர்காமம் புனித பூமியை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், தற்போது இங்கு சலவைக் கற்கள் பதிக்கும் வேலைகள் நடைபெறுகின்றன.

சுவாமி ஊர்வலத்தை கண்டுகளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மேடையைச் சுற்றி இரும்புக் கம்பிகளால் பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டு வருகின்றன.

கதிர்காமம் முருகன் ஆலய நிர்வாகியும் ஊவா மாகண முதலமைச்சருமான சசீந்திர ராஜபக்ஷ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து, மேற்கண்ட செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவைகளைத் தவிர, புனித பூமிக்கு பூஜைக்காக வரும் அடியவர்களுக்கு தங்குதடையின்றி குடிநீர்களை வழங்குவதோடு 20 ஏக்கர் பாதையை கொங்கிறீட் போட்டு செப்பனிடப்பட்டு வரும் வேலைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .