2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

மட்டல சர்வதேச விமான நிலைய நிர்மாண பணிகள் தாமதம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 09 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஜயசேகர)

மட்டல சர்வதேச விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகள், ஓடுபாதை அமைப்பதற்குத் தேவையான குறிப்பிட்ட வகைப் 'பிட்டுமன்' இன்மையால் தாமதமாகியுள்ளன.

பிட்டுமன் என்பது தார் அல்லது பெற்றோலியத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒட்டும் தன்மையுள்ள கறுப்பு நிறப் பொருளாகும். இந்தப் பிட்டுமன், விமான ஓடுபாதை அமைக்க மிகவும் அவசியமான பொருளாகும்.

இந்நிலையில், அரசாங்கம் மட்டல சர்வதேச விமான நிலையத்தை 2011 முடிவளவில் பூர்த்தியாக்க திட்டமிட்டிருந்தது. அத்துடன் 3 கிலோமீற்றர் நீளமான விமான ஓடுபாதை மார்ச் 2011க்கு முன் பூர்த்தியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

விமான ஓடுபாதை தயாரிப்பதற்கு அவசியமான விஷேட தர பிட்டுமனை இயன்றளவு விரைவில் இறக்குமதியாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .