2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

அகில இலங்கை பாடசாலை மட்ட விளையாட்டு போட்டி வீரர்களுக்காக ஹம்பாந்தோட்மையில் விசேட ஏற்பாடு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 09 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.இஸட்.எம்.இர்பான்)
   
பெலியத்த டி.ஏ.ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 28ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள வருகை தந்துள்ள வீரர்களுக்கு அம்பாந்தேபட்டை அபிவிருத்திக் குழுவின் தலைவர் மற்றும் தாருன்யட ஹெடக் அமைப்பின் தலைவர், சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ எம்.பி விஷேட ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார்.

கல்வி அமைச்சினால் நடத்தப்படும் இந்த போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கான தங்குமிட வசதி மற்றும் போக்குவரத்து வசதிகளோடு தினமும் போட்டி முடிவின் பின் விளையாட்டு வீரர்களுக்கு மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச துறை முகமும் மத்தலை சர்வதேச விமான நிலையம், வரண்ட வலய தாவரவியல் பூங்கா, சூரியவௌ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிகட் மைதானம், குடாவெல்ல ஹும்மானய(ஊது துளை) மற்றும் முக்கிய இடங்களினை காண்பிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .