2021 ஜனவரி 23, சனிக்கிழமை

அமெரிக்க தூதுவர் தென் மாகாணத்திற்கு விஜயம்

Super User   / 2012 நவம்பர் 14 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


தென் மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் பல ஆங்கில கல்வி நிகழ்ச்சிகளை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிசேல் ஜே. சிசன் இன்று புதன்கிழமை பார்வையிட்டார்.

தென் மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க தூதுவர், அமெரிக்க தூதுவராயலத்தின் நிதியுதவியுடன் தங்காலையில் இயங்கி வரும் ஆக்செஸ் நிலையத்திற்கு நேரடி விஜயத்தை மேற்கொண்டார்.

இதன்போது, புலமைப்பரிசில் திட்டத்தின் ஊடாக மாணவர்களின் ஆங்கில மொழி திறன் வளர்ச்சியடைந்திருப்பதை அவதானித்தார். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட ஆக்செஸ் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இன்று வரை 1000 இற்கு மேற்பட்ட கிராமிய மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தென் மாகாணத்திலுள்ள சர்வமத தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .