2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

பொதுநலவாய இளைஞர் மாநாட்டுக்காக ஹம்பாந்தோட்டை தயார்படுத்தல்

Super User   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.எம்.இர்பான்

பொதுநலவாய அரச தலைவர் மாநாட்டினையொட்டி இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டை, சிரிபோபுரவில் நிர்மாணிக்கப்பட்டும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நவம்பர் மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரையே இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

இதற்காக ஹம்பாந்தோட்டையில் மாநாட்டு மண்டபம், மேம் பாலம், நவீன பாதைகள் என்பன நிர்மாணிக்கப்பட்டு ஹம்பாந்தோட்டை புதுப்பொலிவுடன் உலக நாட்டு அரச தலைவர்களை வரவேற்க தயாராகி வருகிறது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 53 நாடுகளில் இருந்தும் 106 இளைஞர் யுவதிகளும் இலங்கையிலிருந்து 30 இளைஞர் யுவதிகளுமாக மொத்தம் 136 பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன் 70 பேர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். இவர்கள் பார்வையிட செல்லவுள்ள யால தேசிய சரணாலயம், ரன் மிஹிதென்ன ரெலி சினிமா பூங்கா, ஹம்பாந்தோட்டை வரண்ட வலய பூங்கா ஆகியன தற்போது நவீன மயப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த செயற்பாடுகளை இளைஞர் மாநாட்டு ஏற்பாட்டு குழுவின் இணைத்தலைவரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமாகிய நாமல் ராஜபக்ஷ நேரில் பார்வையிட்டார்.இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுநலவாய செயலாளர் கமலேஸ் சர்மா ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--