2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

சீரற்ற காலநிலையால் அம்பாந்தோட்டையில் 2,680 குடும்பங்கள் பாதிப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 19 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.இஸட்.எம்.இர்பான்)

அம்பாந்தோட்டை மாவட்டமெங்கும் தொடர்ந்தும் பெய்துவரும் கடும் மழையினால் 2,680 குடும்பங்களைச் சேர்ந்த 11,610 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன், அம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

திஸ்ஸமஹாராம, அம்பாந்தோட்டை, மற்றும் அம்பலாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்தோரே கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  அம்பலாந்தோட்டை நகரம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதோடு பஸ் நிலையம், வைத்தியசாலை, பொலிஸ் நிலையம், பாடசாலைகள் என்பனவும் நீரில் மூழ்கியுள்ளன.

மெலே கொலனி கிராமமும் மூழ்கியுள்ளதோடு இந்த கிராமத்திற்கான போக்குவரத்து, மின்சாரம் என்பன துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஹம்பாந்தோட்டை பிரதேசவாசிகள் சிறியரக படகுகள் மூலம் இவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

லுனுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் சகல வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதோடு பத்திற்கும் மேற்பட்ட குளங்களிலிருந்து நீர் வழிந்தோடுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .