2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 27 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி

திருகோணமலை, மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சம்பூர் பிரதேசத்தில் அனல் மின்சார நிலையம் அமைக்கப்படவுள்ளமையை கண்டித்து ஆர்ப்பாட்டமொன்று எதிர்வரும் முதலாம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.

மூதூர் பசுமைக் குழுவின் ஏற்பாட்டில்  மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையச் சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.  
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அனல் மின்சார நிலையம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளனர்.

மேலும், அனல் மின்சாரத் திட்டத்தைக் கைவிடுமாறு ஜனாதிபதியைக் கோரும் மகஜரை மூதூர் பிரதேச செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாகவும் மூதூர் பசுமைக்குழு அமைப்பு  தெரிவித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X