Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
திருகோணமலை, சம்பூர் பிரதேச மீள்குடியேற்றம் மற்றும் கல்வி அபிவிருத்திக்காக அமெரிக்கா ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் உதவித்தொகை வழங்க முன்வந்தமையை சம்பூர் அகதிகள் வரவேற்;றுள்ளனர்.
இந்த நிதி ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்தப்படக்கூடாது எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்தகால அனுபவங்களை கருத்திற்கொண்டு தமது பிரதேச மக்களிடம் இந்த எதிர்பார்ப்பு காணப்படுவதாக சம்பூர் இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் தலைவர் குமாரசாமி நாகேஸ்வரன் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் இந்த உதவி பற்றி செவ்வாய்க்கிழமை (25) அறிவித்திருந்தார்.
தமது பிரதேசத்தில் அதிகாரபூர்வமாக மீள்குடியேற்றத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு, சில நாட்களினுள் கிடைத்துள்ள முதலாவது வெளிநாட்டு உதவியாகக் கருதுவதாகவும் அவர் கூறினார்.
ஏனைய பிரதேசங்களில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றத்துக்கு சர்வதேச நாடுகளிலிருந்தும் அமைப்புகளிடமிருந்தும் உதவிகள் கிடைத்தாலும், அந்த உதவிகள் மக்களுக்கு சென்றடைந்ததா என்ற கேள்வி மக்களிடம் தொடர்ந்து இருந்துவருகின்றது. அந்த உதவிகள் உரிய முறையில் பயன்படுத்தப்படாததன் காரணமாக இன்னமும் அந்தப் பிரதேசங்களில் யுத்த வடுக்கள் காணப்படுகின்றன.
இதன் காரணமாக ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பில் எந்தவொரு வெளிநாட்டு உதவியென்றாலும், எமது பிரதேச சிவில் சமூகத்தின் ஆலோசனைகளை பெற்று பயன்படுத்த வேண்டுமென்பது எமது மக்களின் கோரிக்கை எனவும் அவர் கூறினார்.
25 minute ago
1 hours ago
22 Nov 2025
22 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
22 Nov 2025
22 Nov 2025