2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

இரத்தினபுரியில் 1,065 குடும்பங்கள் பாதிப்பு

Sudharshini   / 2016 மே 19 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சீரற்ற காலநிலை  காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் 1605 குடும்பங்களைச் சேர்ந்த 6,698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இரத்தினபுரி பிரதேச செயலகப்பிரிவில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேரும், பலாங்கொடை பிரதேச செயலகப்பிரிவில் 26 குடும்பங்களை சேர்ந்த 106 குடும்பங்களும், பெல்மதுளை பிரதேச செயலகப்பிரிவில் 17 குடும்பங்களை சேர்ந்த 63 பேரும், கிரியெல்ல பிரதேச செயலகப்பிரிவில் 745 குடும்பங்களை சேர்ந்த 3264 குடும்பங்களும், குருவிட்ட பிரதேச செயலகப்பிரிவில் 790 குடும்பங்களைச் சேர்ந்த 3,163 பேரும், எஹலியகொடை பிரதேச செயலகப்பிரிவில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 38 குடும்பங்கள் உட்பட மொத்தமாக 1,605 குடும்பங்களைச் சேர்ந்த 6,698 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்தவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, களுகங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் இரத்தினபுரியில் களுகங்கையை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய  மேற்கொண்டு வருகின்றது.

இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் நேற்றும்;(18) இன்றும்;(19) சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளும் மூடப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .