2021 மே 18, செவ்வாய்க்கிழமை

இராணுவ வீரருக்கு விளக்கமறியல்

Niroshini   / 2015 நவம்பர் 19 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எப்.முபாரக்

திருகோணமலை, மொறவௌ பகுதியில் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு வந்து சந்தேகத்துக்கிடமான முறையில் அடையாள அட்டைகள் இன்றி நடமாடிய 39 வயது நிரம்பிய இராணுவ வீரரொருவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா புதன்கிழமை (18) உத்தரவிட்டுள்ளார்.                               

ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடி வந்ததாகவும் மதுபானம் அருந்தி தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் மொறவௌ பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர்  செவ்வாய்க்கிழமை(17) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .