Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
பொன் ஆனந்தம் / 2017 மே 30 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொன் ஆனந்தம்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இறால்குழிக் கிராமத்தில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகளுக்கு திருகோணமலை மாவட்டச் செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார பணித்துள்ளார்.
மேலும், மணல் ஏற்றி, இறக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் படகுகளை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உரியவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பணித்துள்ளார்.
இந்த மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மாவட்டச் செயலாளரை அவரது அலுவலகத்தில் திங்கட்கிழமை (29) சந்தித்த இறால்குழி விவசாயச் சம்மேளனம், இறால்குழி கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இறால்குழியில் அகழ்ந்தெடுக்கப்படும் மணலை களப்பின் ஊடாக படகுகள் மூலம் கொண்டு செல்வதற்கான அனுமதி, சிலருக்கு மாவட்டச் செயலகத்தால் ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தது.
இதற்கு இறால்குழிக் கிராமத்தைச் சார்ந்த விவசாய சம்மேளனம், கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியன எதிர்ப்புத் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
40 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago