2020 நவம்பர் 28, சனிக்கிழமை

கசிப்பு நிலையம் முற்றுகை; ஒருவர் கைது

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை, குச்சவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் காட்டுப்பகுதியில் வைத்து சட்டவிரோத கசிப்பு சாராயம் 20 போத்தல் வைத்திருந்த 35 வயது மதிக்கத்தக்க நபரொருவரை, வியாழக்கிழமை மாலை (08), கைதுசெய்துள்ளதாக குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

திரியாய் காட்டுப்பகுதியில் நபரொருவர் சட்டவிரோத கசிப்பு நிலையம் நடத்துவதாகப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த காட்டுப்பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் நடத்திய போது, மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டதோடு, கசிப்பும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .