2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

கஞ்சா விற்பனை; இருவர் கைது

எப். முபாரக்   / 2019 நவம்பர் 27 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை, ஒரு கிலோகிராம் கஞ்சாவுடன் இன்று (27)அதிகாலை கைது செய்துள்ளதாக, திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள், இப்பகுதியில் நீண்ட காலமாக கஞ்சா, ஹெரோய்ன் போதைப்பொருளை விற்பனை செய்து  வருவதாக, திருகோணமலை போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை, அபேயபுர பகுதியைச் சேர்ந்த 31, 20 வயதுடைய இருவரையே, இவ்வாறு கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .