Princiya Dixci / 2015 நவம்பர் 24 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா செடிகள் மூன்றினை வளர்த்து வந்த ஒருவரை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிபதி ஹயான் மீ ஹககே, நேற்று திங்கட்கிழமை (23) உத்தரவிட்டுள்ளது.
மொறவெவ, றொட்டவௌ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு வீட்டின் பின்புரத்தில் மூன்று கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (22) மொறவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் கஞ்சா வியாபாரி எனவும் இந்நபருக்கெதிராக கஞ்சா தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டு வழக்குகள் திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வருவதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
29 minute ago
38 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
38 minute ago
56 minute ago