2026 ஜனவரி 24, சனிக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவர் கைது

Princiya Dixci   / 2016 மார்ச் 10 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

திருகோணமலைப் பிரதேசத்தில் கஞ்சாவைத் தம்வசம் வைத்திருந்த நபரொருவரை, இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் மைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ஹயான் மீ ஹககே, நேற்று புதன்கிழமை (09) உத்தரவிட்டார்.

திருகோணமலை, சமுத்திராகமப் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையை ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர், கஞ்சா வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரைப் பொலிஸார் கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு கிலோகிராம் கஞ்சாவையும் பொலிஸார், திருகோணமலை நீதிமன்ற நீதவானிடத்தில் முன்னிலைப்படுத்தினர். 

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளைத் திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X