2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

கண்காட்சி

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வாழ்வின் எழுச்சி வர்த்தகக் கண்காட்சி புதன்கிழமை  திருகோணமலை, வெருகல் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வெருகலில் இடம்பெற்றது.

சமூர்த்திப் பயனாளிகளின் ஆக்கபூர்வமான உற்பத்திப் பொருட்கள் இக்கண்காட்சியில் இடம்பிடித்திருந்ததாக வெருகல் பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.

வெருகல் பிரதேச பின்தங்கிய கிராமிய உற்பத்தியாளர்களுக்கு இந்தக் கண்காட்சியும் விற்பனையும் பெரும் வாய்ப்பாகவும் ஊக்குவிப்பாகவும் அமைந்துவிட்டதாக பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

கண்காட்சியை  ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் வெருகல் பிரதேச செயலாளர் எம்.தயாபரன், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.லதுமிரா, சமூர்த்தி அதிகாரிகள், பிரதேச சபை அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி அதிகாரிகள் உட்பட பயனாளிகளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X