2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கப் வாகன சாரதியைத் தாக்கிய இருவர் கைது

Thipaan   / 2016 ஜூலை 25 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, ஹொரவபொத்தானை பிரதான வீதியின் கன்னியா பகுதியில், நேற்றிரவு (24) இடம்பெற்ற விபத்தின் பின்னர், கப் வாகன சாரதியைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் இருவரைக் கைது செய்துள்ளதாக, உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளும் கப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் செலுத்துனரான, கன்னியா, கிளிகுஞ்சுமலை பகுதியைச்சேர்ந்த ஜே.தயாளன் (25 வயது) என்பவர் காயமடைந்துள்ளார்.

இதன் போது, விபத்து இடம்பெற்றதைப் பார்த்துக்கொண்டிருந்த இருவர், கப் வாகன சாரதியைத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கப் வாகன சாரதி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்தியமை தொடர்பில், கன்னியா பீலியடி பகுதியைச்சேர்ந்த சுந்தரம் ரமேஷ் (26 வயது) மற்றும் ஆர்.எஸ்.குகதாஸ் (26 வயது) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடாத்தியதாகக் கூறப்படும் இரண்டு நபர்களையும், திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (25) ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த  உப்புவெளி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .