Editorial / 2017 மே 27 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை பகுதியில், இன்று (27) காலை, மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பின் போது, கேரளா கஞ்சா வைத்திருந்த மூவரை, போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
450 கிராம் கஞ்சாவை வைத்திருந்த ஒருவரும் 50 கிராம் கஞ்சா வைத்திருந்த உடலில் மறைத்து வைத்திருந்த அவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, தொடர்ந்து, திருகோணமலை மரத்தடி சந்தியில் 6 கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த, சுட்டா என்று அழைக்கப்படும் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே, மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், திருகோணமலை தலையாகப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .