Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 மே 28 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாணசபைக்கு மாத்திரம், மத்திய அரசாங்கத்தினால் மிகக் குறைந்தளவான நிதி ஒதுக்கப்படுகின்றது என அம்மாகாண சபைத் தவிசாளர் சந்திரதாஸ கலப்பதி தெரிவித்தார்.
மாகாணசபைத் தவிசாளர்கள் சங்கத்தின் ஏழாவது மாநாடு, கிழக்கு மாகாணசபை பேரவைச் செயலகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில் சனிக்கிழமை (27) நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தலைமை வகித்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'கிழக்கு மாகாணசபையைத் தவிர, நாட்டின் அனைத்து மாகாணசபைகளுக்கும் மத்திய அரசாங்கத்தினால் கூடியளவு நிதி வழங்கப்படுகின்றது. ஏனைய மாகாணசபைகளுடன் ஒப்பிடுகையில், கிழக்கு மாகாணசபைக்கு மிகக் குறைந்தளவான நிதி ஒதுக்கப்பட்டு வருவது வெளிப்படையான விடயம்.
இருப்பினும், கிடைக்கும் தொகையை வைத்துக்கொண்டு நாங்கள் வெற்றிகரமாக எமது மாகாணசபையை நிலை குலையாது நடத்திக் கொண்டிருக்கின்றோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .