Niroshini / 2016 மார்ச் 21 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை-குச்சவெளி பிரதேசத்திலுள்ள 03 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இன்று திங்கட்கிழமை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
குச்சவெளி அந்நூரியா முஸ்லிம் மஹா வித்தியாலயம், இலந்தைக்குளம் வித்தியாலயம் மற்றும் அந்நூரியா கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களே இவ்வாறு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
மேற்படி பாடசாலைகளின் மாணவர்கள் தங்களுடைய பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்திக்குமாறு கோரி கடந்த வாரம் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கல்விப்பணிப்பாளர், வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க்தினர் ஆகியோர் ஒன்றிணைந்து கலந்துரையாடலொன்றை நடத்தியபோது 16ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதாக வாக்குறுதி வழங்கப்பட்டது.
அதற்கமைய, அந்நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு 08 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற போதிலும் 02 பேரையும் இலந்தைக்குளம் வித்தியாலயத்துக்கு 04 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக காணப்படுகின்ற போதிலும் 01 ஆசிரியரையும்; அந்நூரியா கனிஷ்ட வித்தியாலயத்துக்கு 04 பேர் தேவைப்படும் பட்சத்தில் 01 ஆசிரியரையும் நியமித்துள்ளதாக பெற்றோர்களும் மாணவர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றப்படாமையைக் கண்டித்தே பாடசாலைக்கு செல்லாமல் பகிஷ்கரிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்திக்காவிட்டால், நாளை மறுதினம் புதன்கிழமை வீதியை மறைத்து போராட்டம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .