2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

கிண்ணியா தாதி உத்தியோகஸ்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2016 மார்ச் 31 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதிர்தீன் சியானா, ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, கிண்ணியா தள வைத்தியசாலையின் அரச தாதி உத்தியோகஸ்தர்கள்  தங்களின் முறையற்ற இடமாற்றத்தைக் கண்டித்து இன்று வியாழக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.  

இவ்வைத்தியசாலையில் கடமையாற்றிய அரச தாதி உத்தியோகஸ்தர்கள்; மூதூருக்கும் மூதூர் தள வைத்தியசாலையில் கடமையாற்றிய அரச தாதி உத்தியோகஸ்தர்கள் கிண்ணியாவுக்கும் முறையற்ற விதத்தில் இடமாற்றப்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக வெளிநோயாளர் பிரிவுக்கு வரும் நோயாளர்களும் வைத்தியசாலையில் தங்கியிருந்து  சிகிச்சை பெறும்  நோயாளர்களும்; மருந்தைப் பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .