2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

சம்பூர் சிறுவன் கொலை விவகாரம்: சிறுவனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2016 மார்ச் 31 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் ஆறு வயதான குதாஸ் தர்சன் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை, மீண்டும், ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், இன்று வியாழக்கிழமை (31) உத்தரவிட்டார்.

கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி சம்பூர் பிரதேசத்தில் குகதாஸ் தர்சன் என்ற 06 வயது சிறுவன், கொலைசெய்யப்பட்டு வயிற்றில் பாரமான கல்லொன்றினால் கட்டிக் கிணற்றில் போடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான 16 வயது சிறுவனை, மூதூர் நீதவான் நீதமன்றத்தில் பொலிஸார், இன்று ஆஜர்படுத்திய போதே மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X