2020 நவம்பர் 25, புதன்கிழமை

சம்பூர் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் 2017இல் பூர்த்திசெய்ய நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

மீள்குடியேற்றப் பிரதேசமான சம்பூரில் இன்னும் நிறைவேற்றப்படாமலுள்ள அடிப்படைத் தேவைகள் அனைத்தும் எதிர்வரும் 2017ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக திருகோணமலை மாவட்டச் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார, இன்று (18) தெரிவித்தார்.

சம்பூர் மக்களின் தேவைகளை முன்வைத்து அங்கு கூட்டம் சனிக்கிழமை (17) நடைபெற்றதுபோது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாணக்  கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, மாகாணசபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் உள்ளிட்டோர் சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தொடர்பில் தெரிவித்திருந்தனர்.

இப்பிரதேசத்தில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டவுடன்  அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள்,  நெல்சிப் அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் பல தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.  

2017ஆம் ஆண்டில்; மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் 300 வீடுகளை  நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன்,  இதன் மூலம்  புள்ளி அடிப்படையில் தெரிவானவர்களுக்கு வீட்டுத் தேவை பூர்த்தி செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .