2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

சம்பூர் வைத்தியசாலை ஜனாதிபதியால் திறந்து வைப்பு

Princiya Dixci   / 2017 மே 20 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் முயற்சியில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 40 மில்லியன் ரூபாய்கும் மேற்பட்ட நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட திருகோணமலை, சம்பூர் பிராந்திய வைத்தியசாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (20) காலை திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்மந்தன், அமைச்சர் பைஷர் முஸ்தபா, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெணாண்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண அமைச்சர்களான தண்டாயுதபானி, ஆரிய கலபதி, நாநாளுமன்ற உறுப்பினர்களான மஹ்ரூப், முன்னாள் அமைச்சர் டிலான் பெராரா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான நடராஜன், லாஹி, அன்வர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள்; கலந்துகொண்டனர்.

இவ்வைதியசாலையை திறந்து வைத்த ஜனாதிபதி, வைத்தியசாலைகளைப் பார்வையிட்டு, அங்குள்ள மக்களிடமும் ஊழியர்களுடன் உரையாடினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .