Suganthini Ratnam / 2016 ஜூலை 18 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
திருகோணமலை, கந்தளாய் தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அப்துல் மஜீத்புரம் மாவத்தையிலுள்ள வீடொன்றில் சூதாடிய குற்றச்சாட்டின் பேரில் 04 பேரை இன்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், சூதாடிய இடத்திலிருந்து 22 ஆயிரம் ரூபாய் பணமும் பாய் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த வீட்டில் சிலர் சூதாடுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அவ்வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .