Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மார்ச் 17 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலையில் அனுமதிப்பத்திரமின்றி ஐந்து போத்தல் சாராயத்தை வைத்திருந்த நபர் ஒருவருக்கு குச்சவெளி நீதவான் நீதிமன்றம் பதினைந்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அதனைத் செலுத்தத் தவறும் பட்சத்தில் மூன்று மாதம் சிறைதண்டனையும் விதித்து இன்று வியாழக்கிழமை (17) தீர்ப்பளித்துள்ளது.
கண்டி, பேராதனிய, பகுதியைச் சேர்ந்த வடுகே தர்மதாச (வயது 56) என்பவருக்கே அத்தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் மீன்பிடி தொழில் மேற்கொள்வதற்காக சென்ற நிலையில், அனுமதிப்பத்திரமின்றி சாராயத்தை விற்பனை செய்து வந்துள்ளார்.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே குறித்த நபரை கைது செய்ததாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரை பொலிஸார் குச்சவெளி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே, தண்டப்பணத்தை செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மூன்று மாதம் சிறைதண்டனை விதித்து நீதிவான் உத்தரவிட்டார்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago