2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

சிறுமியின் கையைப் பிடித்து இழுத்தவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 ஜூலை 20 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பன்னிரண்டு வயதான சிறுமியொருவரின் கையைப்பிடித்து இழுத்த நபரொருவரை இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு, மூதூர் நீதமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், செவ்வாய்கிழமை (19) உத்தரவிட்டார்.

மூதூர்-5 பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். கூனித்தீவு பகுதிக்குச் சென்ற குறித்த சந்தேகநபர், அங்கே கடைக்குச் சென்ற சிறுமியொருவரின் கையினைப் பிடித்து இழுத்ததாக சம்பூர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே திங்கட்கிழமை (18) மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபரை, மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .