Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2025 ஜூலை 04 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
செம்மணி மனித புதைகுழியில் வியாழக்கிழமையும் (03) சில மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் 40 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் எட்டாம் நாளான வியாழக்கிழமை (04) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.
34 மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இரண்டு சிறுவர்களின் எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மண்டையோடுகள் தெரிகின்றன. அதில் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது.மொத்தமாக 40 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு பேருடைய மண்டையோட்டு தொகுதிகள் இன்னமும் துப்பரவாக அடையாளப்படுத்தப்படாமல் இருக்கிறது.
ஏற்கனவே செய்மதியில் காட்டப்பட்ட சந்தேகத்துக்கிடமான பிரதேசத்தில் புதன்கிழமை (02) முதல் அகழ்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை (03) ஒரு ஆடையை ஒத்த ஒரு சந்தேகத்திற்குரிய பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது அகழப்படவில்லை. அது அகழ்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவை தொடர்பான மேலதிக விவரங்களை தெரிவிக்க முடியும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago