2020 நவம்பர் 25, புதன்கிழமை

சிறுவர்களை துன்புறுத்திய தாய் உட்பட இருவருக்கு விளக்கமறியல்

Niroshini   / 2016 மார்ச் 04 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

இரண்டு சிறுவர்களை அடித்து துன்புறுத்திய முச்சக்கரவண்டி சாரதியையும் சிறார்களின் தாயையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா நேற்று (03) உத்தரவிட்டார்.

07 வயது மற்றும் 05 வயது சிறார்களின் தந்தை வெளிநாடு சென்ற பின்னர் தாயார் முச்சக்கரவண்டி சாரதியுடன் கள்ளத்தொடர்பில் பேணி வந்ததாகவும் அதனையடுத்து, சிறார்களின் தந்தை வெளிநாட்டிலிருந்து வருகை தந்து தமது இரண்டு பிள்ளைகளையும் மீட்டு தருமாறு கூறி திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

அம்முறைப்பாட்டையடுத்து விசாரணை செய்த பொலிஸார் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்த முச்சக்கரவண்டி சாரதியையும் பெண்ணையும் சிறுவர்களையும் விசாரணை செய்தபோது, முச்சக்கரவண்டி சாரதியால் தாக்கப்பட்டதாக இரண்டு சிறார்களும் வாக்கு மூலம் அளித்தனர்.

அதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் முச்சக்கரவண்டி சாரதியையும் சிறார்களின் தாயையும் நீதிமன்றில் ஆஜர்செய்து சிறார்களை நேரில் விசாரணை செய்த நீதவான் டி.சரவணராஜா, 07 வயதுடைய சிறுவன், தனது  இடது காலில் அடிகாய தழும்பு காணப்படுவதாகவும் மற்றைய சிறுவன் முதுகில் சுடுகாயம் இருப்பதையும் காட்டியுள்ளனர்.

அதனையடுத்து, தாயையும் கள்ளக்காதலனுக்கு துணை வழங்கியதாக தெரிவித்து எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் சிறுவர்களை  தந்தையிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--