Thipaan / 2016 ஜூலை 11 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் நகரிலுள்ள சில்லறைக் கடையொன்றை உடைத்து ஒரு இலட்சம் ரூபாய் பணம் மற்றும் அலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் என்பவற்றைக் கொள்ளையடித்த ஒருவரை, இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் எச்.ஜி.தம்மிக்க, ஞாயிற்றுக்கிழமை (10) உத்தரவிட்டார்.
கந்தளாய் நகரில் அமைந்துள்ள தனது சில்லறைக் கடையை உடைத்து ஒரு இலட்சம் ரூபாய் பணமும் அலைபேசிகளின் மீள்நிரப்பு அட்டைகளும் கொள்ளையிடபட்டதாக, கடை உரிமையாளரால் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இம்முறைபாட்டையடுத்து, குறித்த சந்தேக நபரை சனிக்கிழமை (09) கைது செய்த பொலிஸார், அவரைக் கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த நபருக்கெதிராக மற்றொரு திருட்டு வழக்கும் நீதிமன்றில் தொடரப்பட்டிருப்பதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
16 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
46 minute ago
1 hours ago