2020 நவம்பர் 25, புதன்கிழமை

டெங்கொழிப்பு வேலைத்திட்டம்

தீஷான் அஹமட்   / 2020 ஜனவரி 07 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேசிய டெங்கொழிப்பு வேலைத்திட்டம், நாடளாவிய ரீதியில் இன்று (07) முன்னெடுக்கப்பட்டதன் அடிப்படையில், மூதூரிலும், வெற்றுக் காணிகளும் வீடுகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டதோடு, டெங்கு நுளம்பு பரவும் வகையில் காணப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு, எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்தச் சோதனை நடவடிக்கையில், மூதூர் பொதுச் சுகாதாரப் பணிமனை உத்தியோகத்தர்கள், பொலிஸார், கடற்படையினர், மூதூர் பிரதேச சபை ஊழியர்கள், டெங்கொழிப்பு உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

மூதூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில், இதுவரை 500 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும், மூதூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி வை.ஜெஸ்மி தெரிவித்தார்.

இதேவேளை, தேசிய டெங்கொழிப்பு வேலைத்திட்டம், நாடளாவிய ரீதியில் நாளையும் (08) நாளை மறுதினமும் (09) முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .