S.Renuka / 2026 மார்ச் 16 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஐசியூ பிரிவில் இன்று திங்கட்கிழமை (16) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பாதுகாப்பாக மீட்கப்பட்ட நோயாளிகள் சிலர், அந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதிய மருத்துவ கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதையறிந்து சம்பவ இடத்துக்கு ஒடிசா மாநில முதல்வர் மோகன் மாஜி, தீ விபத்தில் இருந்து தப்பிய நோயாளிகளிடம் நலம் விசாரித்துள்ளதுன், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என உறுதி அளித்தார்.
மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து சட்ட ரீதியான விசாரணை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டுள்ளார்.
ரூ.25 இலட்சம் நிவாரணம்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.25 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
மேலும், தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினருக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
20 minute ago
34 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
34 minute ago
51 minute ago
1 hours ago