2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

டொலர் மோசடி; எழுவர் கைது

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத்

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உவர்மலை பிரதேசத்தில், சந்தைப் பெறுமதியை விடக் குறைந்த விலைக்கு டொலர் மாற்றித்தருவதாக மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 பேர், இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 10 இலட்சம் ரூபாயும் 1  இலட்சத்து 85,000 ரூபாய் பெறுமதியான ஆயிரம் அமெரிக்க  டொலரும் மீட்கப்பட்டதாக, திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில், நுவரெலியா - தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த நால்வரும், பொலன்னறுவை - மெதலகிரி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், திருகோணமலை – செல்வநாயகபுரம், வான்எல பிரதேசங்களைச் சேர்ந்த தலா ஒருவரும் உள்ளடங்குகின்றனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்த மோசடி வேலைக்காகப் பயன்படுத்தப்பட்ட ஓட்டோவும் காரும் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்கள், கந்தளாய் பிரதேசத்திலுள்ள ஒருவரைத் தொடர்புகொண்டு, தம்மிடம் அமெரிக்க  டொலர்கள்  இருப்பதாகவும் டொலர்களை,  சந்தைப் மதிப்பை விட குறைந்த விலைக்கு வாங்க முடியுமெனப் பேரம்பேசியுள்ளனர்.

இதனையடுத்து அந்நபரை வரவழைத்து, அவரிடமிருந்து பத்து இலட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு  ஓடியுள்ளனர்.

இந்நிலையில், பணத்தைப் பறிகொடுத்த நபரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, திருகோணமலை தலைமையகப் பொலிஸார், துரித நடவடிக்கை மேற்கொண்டு, குறித்த நபர்களைக் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .