Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 03, புதன்கிழமை
Kogilavani / 2017 ஜூலை 20 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
கருப்பு ஜூலையை முன்னிட்டு, மக்கள் விடுதலை முன்னணி, தனது சகோதரத்துவ வேலைத்திட்டத்தை, முன்னணியின் இளைஞர் கழக சம்மேளனத்தின் ஊடாக திருகோணமலையில் முன்னெடுக்க உள்ளதாக, அக்கட்சியின் அகில இலங்கைத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
“மக்கள் விடுதலை முன்னணி, ஒவ்வொரு வருடமும் ஜுலை மாதம் 30ஆம் திகதியை கருப்பு ஜூலையாக கொண்டாடி வருகிறது. இந்த நாட்டில், 1983 ஆம் ஆண்டு ஜுலை 30ஆம் திகதி ஏற்பட்ட இன வன்முறையை நினைவு கூருவதற்காகவே, ஜே.வி.பி இந்நிகழ்வை ஒவ்வொரு வருடமும் அனுஷ்டித்து வருகின்றது. கடந்த வருடம் கருப்பு ஜூலை யாழ்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், திருகோணமலையில் கருப்பு ஜூலை அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு 20ஆம் திகதி முதல் எதிர்வரும் 27ஆம் திகதிவரை, திருகோணமலை மாவட்டத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில், மக்கள் பயன்பெறும் வகையிலான பொதுச் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த பொதுச் சேவைகளில், சிரமதான பணிகள் , டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள், மக்களுக்கு இன ஐக்கியத்தை தெளிவூட்டும் வகையிலான கலந்துரையாடல்கள் என்பன முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த வேலைத்திட்டங்களில், மக்கள் விடுதலை முன்னணியின் நாடளாவிய இளைஞர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர். இவர்கள், 30 பேரடங்கிய குழுக்களாக பிரிநித்து நின்று செயற்படவுள்ளனர்.
இச்செயற்றிட்டங்களில், ஜே.வி.பியின் மலையக பிரதிநிதிகள் மற்றும் அங்கத்தவர்களும் பங்கேற்றவுள்ளனர். இதனையடுத்து, எதிர்வரும் 30ஆம் திகதி, கொழும்பில் நடைபெறவுள்ள அமைதி பேரணியிலும் கலந்துகொள்ளவுள்ளோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
5 hours ago
5 hours ago