Thipaan / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், தாபரிப்புப் பணம் செலுத்தாது தலைமறைவாக இருந்த நபரொருவரை, எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் எச்.ஜி.தம்மிக்க, நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) உத்தரவிட்டார்.
வான்எல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், தனது இரண்டு பிள்ளைகளுக்கும் மாதாந்தம் தாபரிப்புப் பணமாக எட்டாயிரம் ரூபாய் செலுத்தி வந்த நிலையில், பத்து மாதங்களாக எண்பதாயிரம் ரூபாய் செலுத்தாது தலைமறைவாக இருந்துள்ளார்.
இந்நிலையில், அவரின் முன்னாள் மனைவி, பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, அவரை, சனிக்கிழமை (30) கைது செய்த கந்தளாய் பொலிஸார், நேற்று (31) கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.
13 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
1 hours ago