2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

தோப்பூரில் கைகலப்பு: அறுவர் காயம்

Thipaan   / 2016 ஜூலை 16 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட், வடமலை ராஜ்குமார்

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் உப்பூரல் பகுதியில், இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் அறுவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த இரண்டு குழுக்களுக்கிடையிலேயே, இன்று காலை 10 மணியளவில் இந்தக் கைகலப்பு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் சற்று பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் காயமடைந்த அறுவரில் நால்வர் சேருநுவர வைத்தியசாலையிலும் இருவர் மூதூர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காணியை உரிமை கொண்டாடுவதில் ஏற்பட்ட வாய்த்தர்கமே கைகலப்பாக மாறிவிட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில்,  தோப்பூர் செல்வநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் மஜீது நஜிமுதீன் (57)நஜிமுதீன் இர்சாத் (20) நூறு முஹம்மது குபைபுல்லாஹ்(45) ஏ.எம்.சிராஜிதீன் (58) ஆகியோரும், உப்பூரல் பகுதியைச் சேர்ந்த நாகராசா (40) மற்றும் ந.சிவசோதி (45) ஆகியோருமே காயமடைந்துள்ளதாக தெரிவித்த சேருநுவர பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .