2021 மே 08, சனிக்கிழமை

நுகர்வோர் அதிகாரசபையின் விதிமுறைகளை மீறிய நால்வருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 24 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி

திருகோணமலை நுகர்வோர் அதிகார சபை ஊழியர்கள் மூதூர் பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொண்ட திடீர்ச் சோதனையின்போது, நுகர்வோர் அதிகார சபையின் சட்ட விதிமுறைகளை மீறி பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 04 வர்த்தகர்களுக்கு தலா 1,500 ரூபாய் படி மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதவான் ஜ.றிஸ்வான இன்று செவ்வாய்க்கிழமை தண்டம் விதித்தார்.

பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாமை, காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை, அதிக விலையில்  பொருட்களை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்கள் 04 பேரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X