Niroshini / 2016 மே 21 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்
நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் கணினி அறிவு மிக முக்கியமானதாகும். ஏனெனில் தற்போது அதிகமான அரச அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் கணினி மயப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் படித்துவிட்டு தொழில் தேடுவதாக இருந்தால் கணினி அறிவு தகைமையாக கேட்கப்படுகின்றதென கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட கணினி நிலையத்தை வியாழக்கிழமை(19) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
தகவல் தொழில்நுட்பத்தின் தற்கால முக்கியத்துவம் உணரப்பட்டமையினால் தற்போது க.பொ.த.உயர்தரத்தில் ஏனைய பாடங்கள் இருப்பது போன்று தகவல் தொழில்நுட்பபாடமும் ஒரு பாடமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான பாடங்களை மாணவர்கள் உயர்தரத்தில் எடுப்பதன் மூலம் பல்கலைகழகம் சென்று எதிர்காலத்தில் சிறந்த தொழில்களை பெற்றுக் கொள்ள முடியும்.
கிழக்கு மாகாண தகவல் தொழில்நுட்ப அமைச்சு தற்போது குழந்நை பருவத்திலேயே காணப்படுகின்றது. ஏனென்றால் இதற்கு முன்னர் இவ் அமைச்சு சுகாதார அமைச்சின் கீழ் இருந்தது தற்போதுதான் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளது. இதனால் இவ் அமைச்சை வளர்த்தெடுப்பதற்கான முயற்சிகளை நாம் மேற் கொண்டு வருகின்றோம்.
பாடசாலைகளில் வளங்கள் குறைபாடாக காணப்பட்டால் முழுமையாக அரசியல்வாதிகளிடம் சென்று அதனை பெற முடியாது பாடசாலை அமையப்பெற்ற சூழலில் தனவந்தர்கள் இருப்பார்கள் அவர்களிடம் சென்று பாடசாலையின் தேவைகளை சுட்டிக்காட்டி அதனை பெற்றுக் கொள்ள முயற்சிகள் செய்யலாம்.ஏன் என்றால் இன்று பல தனவந்தர்கள் கல்விக்காக உதவி செய்கின்றார்கள் என்றார்.
9 minute ago
38 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
38 minute ago
46 minute ago