2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

பணப்பையை பறித்த இருவருக்கு பிணை

Suganthini Ratnam   / 2016 மே 27 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் சீனா நாட்டுப் பெண் ஒருவரின் பணப்பையை பறித்துக்கொண்டு தப்பியோடியதாகக் கூறப்படும் இரண்டு பேரை பிணையில் செல்வதற்கு திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா, நேற்று வியாழக்கிழமை அனுமதித்துள்ளார்.

இவர்கள் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதவான் இவர்களை பிணையில் செல்ல அனுமதித்துள்ளதுடன்,  எதிர்வரும் மாதம்; 26ஆம் திகதி நீதிமன்றத்திற்கு சமூகம் தருமாறு உத்தரவிட்டுள்ளார்.

அலஸ்தோட்டம் பகுதியில் சென்றுகொண்டிருந்த சீனா நாட்டு பெண்ணின் பணப்பையை பறித்துக்கொண்டு சென்றமை தொடர்பில் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, தேடுதல் மேற்கொண்டு 21, 25 வயதுகளையுடைய இவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 64 ஆயிரம் ரூபாய் பணத்தையும் 120 டொலர் உள்ளிட்டவற்றை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .