Suganthini Ratnam / 2015 நவம்பர் 24 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு எந்தவித முன்னறிவித்தலுமின்றி பொலிஸ் பாதுகாப்பை நீக்கியமை கவலைக்குரிய விடயமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று செவ்வாய்கிழமை கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், 'கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பொலிஸ் பாதுகாப்பை நீக்கியமை தொடர்பில் மாகாண முதலமைச்சர் கவனத்தில் எடுத்து இதற்கு இப்பிரச்சினையை தீர்க்க வேண்டும்' என்றார்.
'மாகாண சபை உறுப்பினர்கள் எப்போதும் மக்களுடன் நின்று சேவை செய்யக்கூடியவர்கள.; அவர்களுக்கு இவ்வாறு பாதுகாப்பை நீக்கியமை வருத்தத்தை ஏற்படுத்துகின்றது. இவ்வாற செயற்பாடு மாகாண சபை உறுப்பினர்களின் தகர்வை ஏற்படுத்தும் ஒரு செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது' என்றார்.
13 minute ago
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago
1 hours ago