Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 நவம்பர் 16 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
தனது மனைவியையும் வீட்டையும் மண்ணெண்ணை ஊற்றி எரிப்பதற்கு முயற்சி செய்த சந்தேகநபரை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, ஞாயிற்றுக்கிழமை (15) உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபயபுர பகுதியில் சந்தேகநபர், தனது மனைவியோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மது அருந்திவிட்டு, சனிக்கிழமை (14) இரவு வீட்டுக்குச் சென்று மனைவியையும் வீட்டையும் மண்ணெண்ணை ஊற்றி தீ வைப்பதற்கு முற்பட்டுள்ளார்.
இதன்போது மனைவி கூக்குரலிட்டு சத்தமிட்டதால் அயலவர்கள் ஓடிவந்து குறித்த சந்தேகநபரின் மனைவியை காப்பாற்றியுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் 39 வயதுடைய சந்தேகநபரைக் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை (15) திருகோணமலை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போது நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
18 minute ago
2 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
2 hours ago
8 hours ago