2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

மரக் குற்றிகளைக் கடத்திய இருவர் கைது

எப். முபாரக்   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சூரியபுர பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மரக் கடத்தலில் ஈடுபட்ட இருவரை நேற்று(12) மாலை கைது செய்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவித்தனர்.

வான்எல, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 43, 24 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர்கள், காட்டில் மரங்களை வெட்டி இரவில் உழவு இயந்திரங்கள், டிப்பர் வாகனங்களில் கடத்திச் செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

சந்தேக நபர்களை, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X