Suganthini Ratnam / 2016 மார்ச் 29 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, மொறவெவ பிரதேசத்தில் மீள்குடியேற்ற அமைச்சால் 133 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அப்பிரதேச செயலாளர் டபிள்யூ.எம்.பாத்திய விஐயந்த தெரிவித்தார்.
இதன்போது, இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 33 குடும்பங்களுக்கும் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.
இந்நிலையில், மொறவௌ பிரதேசத்தின் 10 கிராம அலுவலர் பிரிவுகள் தோறும் கிராம அலுவலர்கள் ஊடாக இதற்கான விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. யுத்தப் பாதிப்புக்குள்ளான குடும்பங்களே இதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், அக்குடும்பங்களின் சொந்தக் காணிகளிலேயே இந்த வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மீன்பிடி, விவசாயம், சிறுகைத்தொழில் ஆகியவற்றுக்காக இங்குள்ள 100 குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான தொழில் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
10 minute ago
18 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
3 hours ago