2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

Gavitha   / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி மற்றும் இரக்கக்கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 12 பேருக்கு, இன்று சனிக்கிழமை,  இரக்கக்கண்டி அல்ஹம்றா மகா வித்தியாலயத்தில் வைத்து, வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டதாக, முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.றமீஸ் தெரிவித்தார்.

ஒவ்வொருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன், முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் அப்துல் சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--