2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

யானைகள் தாக்கி காவலாளியும் விவசாயியும் பலி

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு பிரதேசங்களில் யானைகள் தாக்கி, காவலாளியொருவரும் விவசாயியொருவரும், நேற்று (07) உயிரிழந்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள காரைக்காடு, கணங்குளமடு வயல் காவலாளியான பூபாலப்பிள்ளை குமாரசாமி (வயது 74) யானைகள் தாக்கி உயிரிழந்துள்ளார்.

வந்தாறுமூலை, ஆலையடி வீதியை அண்டி வசித்து வந்த இவர், சம்பவ தினத்தன்று வயல் காவலுக்கு நின்றிருந்தபோது, காட்டுப் பக்கமிருந்து திடீரென காட்டு யானைகள், வயல்பக்கம் பிரவேசித்துள்ளன.

வயல் காவலுக்குச் சென்றவர் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், வீடு திரும்பாததால், உறவினர்கள் அவரைத் தேடிச் சென்ற போது, நெல் வயலுக்குள் அவர் இறந்த நிலையில் வீழ்ந்து கிடந்துள்ளார்.

இதேவேளை, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில், புலிபாய்ந்தகல், மீயான்குளம் பிரதேசத்தில், யானை தாக்கியதில், ஆறு பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகம் ரவிச்சந்திரன் (வயது 43) எனும் விவசாயி உயிரிழந்துள்ளாரென, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .