2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

வான் குடைசாய்ந்ததில் நால்வர் காயம்

Editorial   / 2020 மார்ச் 08 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியாவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற வானொன்று, மூதூர், இறால்குழிப் பாலத்துக்கு முன்னால் இன்று (08) அதிகாலை 5.30க்கு குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், நால்வர் காயமடைந்துள்ளனரென, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மாடு ஒன்று குறுக்காகப் பாய்ந்துள்ளமையால் இந்த விபத்து இடம்பெற்றள்ளதாகவும் வானின் சாரதியும் வானிலிருந்த மதரஸா மாணவிகளில் மூவரும் காயங்களுக்கு உள்ளானரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயங்களுக்குள்ளான நால்வரும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X