2021 ஜனவரி 23, சனிக்கிழமை

வயோதிபரை மோதிய இளைஞனுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஜூலை 09 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை- கோபாலபுரம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபரை மோதிய மோட்டார் சைக்கிள் சாரதியை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.ஏ.முஹீத், இன்று சனிக்கிழமை (09) உத்தரவிட்டார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர், நிலாவெளி கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் ராஜா (வயது 23) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

நிலாவெளி -கோபாலபுரம் பகுதியில் துவிச்சக்கர வண்டிக்குப்  பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதினால் துவிச்சக்கர வண்டியில் சென்ற அதே இடத்தைச் சேர்ந்த நடராஜா தங்கவேல் (வயது 63) என்பவர் அவ்விடத்திலேயே  உயிரிழந்தார்.

இவ்விபத்துடன் தொடர்புடைய இளைஞரை, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உயிரிழந்தவரின் சடலம், தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

விபத்து தொடர்பில் குச்சவெளிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .