2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

‘வேலைவாய்ப்புகள் வழங்கும் போது சமமாகவே வழங்குவேன்’

அப்துல்சலாம் யாசீம்   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்புகள் வழங்கும்போது,  இன, மத வேறுபாடின்றி சமமாகவே வழங்குவேன் என, கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி  சில்வா தெரிவித்தார்.

வேலைவாய்ப்புகள் வழங்குமாறு கோரிக்கை விடுத்து, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு வருகை தந்த இளைஞர், யுவதிகளிடமே அவர் இதனைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற வெற்றிடங்களை நிரப்பும் போது, அனைவருக்கும் ஒரே விதத்தில் பாகுபாடின்றி நியமனங்களை வழங்கக் காத்திருப்பதாகவும் நிதியமைச்சிலிருந்து அனுமதி கிடைத்தவுடன், தங்களது கல்வித் தகைமைகளுக்கு ஏற்ற விதத்தில் மிக விரைவில் நியமனங்கள் வழங்கவுள்ளதாகவும், ஆளுநர் தெரிவித்தார்.

தொழில்களைப் பெற்றுக் கொள்வதற்காக, திருகோணமலையிலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கும் மட்டக்களப்பிலிருந்து மீண்டும் திருகோணமலைக்கும்  சென்று அலைய வேண்டாம் எனவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .