Niroshini / 2016 மார்ச் 29 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா
திருகோணமலை, ரொட்டவௌ பகுதியில் 'மொறவெவ, கோமரங்கடவெல தேசோதய பிராதேசிய பலமண்டல' எனும் பெயரில் வீட்டுத்திட்டம் வழங்கவுள்ளதாக தெரிவித்து, அவ்வமைப்புக்கு 800 ரூபாய் அங்கத்துவப்பணம் செலுத்துமாறு கூறி சிலர் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வீடுகள் இன்றி குடிசைகளில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கும் புதிதாக திருமணம் செய்து உறவினர்களின் வீடுகளில் தங்கி வாழ்ந்து வருபவர்களுக்கும் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே பணம் சேகரிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இதில் பாதிக்கப்பட்ட தாயொருவர் கருத்து தெரிவிக்கையில்,
'தனது மகளுக்கு வீடு வழங்குவதாகவும் உடனடியாக தற்காலிக கொட்டிலொன்றை அமைக்குமாறும் கூறியதையடுத்து, தான் வாழ்ந்து வந்த வீட்டின் சமையலறைப்பகுதியை உடைத்து, அதில் காணப்பட்ட தகரங்களை எடுத்துச்சென்று வேறு இடத்தில் குடிசையொன்றை அமைத்தேன்' எனத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மொறவௌ பிரதேச செயலாளர் டப்ளியூ.எம்.பாத்திய விஐயந்த கருத்து தெரிவிக்கையில்,
'கோமரங்கடவெல தேசோதய பிராதேசிய பலமண்டல' எனும் அரச சார்பற்ற அமைப்பு, மொறவௌ பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்படவில்லை. அவ்வாறான வீட்டுத்திட்டங்கள் எதுவும் இல்லை. எனவே, மக்கள் பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்' எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .